நாட்டில் தற்போது மிகவும் பாரதூரமான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாட்டில் இன்று மாலை ஒரே நேரத்தில் 609 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments