Home » » பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி...!!

பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


பானதுறை மருத்துவமனையின் பிரதான தலைமை தாதியின் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த யுவதி ஹ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாகவும், மினுவங்கொடை பிரான்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த யுவதி கடந்த வாரம் பானதுறை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மினுவங்கொட பிரான்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணொருவரின் உறவினருடன் தங்கியிருந்த காரணத்தினால் அவருக்கு பானதுறை மருத்துவமனையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த யுவதி கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஐ.டி.எச் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |