(டபிள்யூ. டிக்க்ஷித்)
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்.
"I.D.H இல் 5 மாணவர்கள் உள்ளனர், அவர்களில் 2 பேர் கொவிட் நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 3 பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர். அவர்கள் நாளை மருத்துவமனையில் பரீட்சையை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது, உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி நவம்பர் 6 வரை நடைபெறும்.
0 comments: