Advertisement

Responsive Advertisement

நேற்றைய தினம் மாத்திரம் 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...!!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 523 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஆயிரத்து 209 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 350 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 813 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments