இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மிருகக் காட்சி சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதன்படி, அனைத்து மிருகக் காட்சி சாலைகளையும் இன்று முதல் மூடுவதற்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக விடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பூங்காக்களுக்கு உள்நுழைவதை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
0 Comments