Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் இருந்த ஆசிரியர் திடீர் மரணம்

 


ஷமி மண்டூர்)


நடைபெற்று முடிந்த புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் இருந்த ஆசிரியர் 2ம்குறுக்கு,திருச்செந்தூர்,கல்லடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரவீந்திரன் வயது (52) என்பவர் திடீரென மயக்கமுற்று மரணமடைந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலத்தில் நடைபெற்று முடிந்த புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் இருந்த வேளை இவர் மயக்கமுற்று மண்டபத்தினுள் மரணடைந்துள்ளர்.இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.


மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments