Advertisement

Responsive Advertisement

ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! முழுமையாக மூடப்பட்டது நகர்

 


ஹட்டனில் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த ஹட்டன் நகர மீன் விற்பனையார்களை கடந்த 23 ஆம் திகதி பி.சி ஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந் நிலையில் , ஹட்டன் மார்கட் பகுதி மூடப்பட்டதுடன் குறித்த நபரருடன் தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

Post a Comment

0 Comments