( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜெஸ்மின்)
கிழக்கு மாகாண நாடகப் பயிற்சி வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நாடகப்பயிற்சி வேலைத்திட்டம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறியாக கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி திங்கட் கிழமையுடன் ( 5 ) நிறைவடைந்தது.
நாடகத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான கோட்பாட்டு செயல்முறைப் பயிற்சியை வழங்கி தேசிய மட்டத்தில் தொழில் வழங்குனர்களாக மாற்றுவதற்கு இவ் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
இப்பயிற்சி செயல்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர்.
0 comments: