Home » » ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

 


கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் சிந்தித்து தொலைப்பேசி, தபால் மற்றும் இணைய வழி மூலமாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் சேவை பிரிவை 0114-354550, 0112-354550 ஆகிய தொலைப்பேசி இலங்கங்களின் மூலம் தொடர்புக் கொள்ள முடியும்.

அத்துடன் 0112-338073 என்ற இலக்கத்தின் ஊடாக ஒம்புட்ஸ் மென் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

அதேபோல் 0112-354354 என்ற இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்தை தொடர்புக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |