Advertisement

Responsive Advertisement

திருகோணமலையில் 09 பேருக்கு கொரோனா தொற்று- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 46ஆக உயர்வு!!

 


திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 283 பேருக்கு இன்றுவரை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், திருகோணமலை மாவட்டத்தில் 132 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 பேருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பொத்துவில், கல்முனை தெற்கு போன்ற பகுதிகளில் 76 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் இதுவரை 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், கல்முனையில் 09 பேரும், திருகோணமலையில் 09 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments