Advertisement

Responsive Advertisement

இலங்கையில் 6000ஐக் கடந்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை!!

 


இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆறு பேர் பேலியகொட மீன் சந்தைத் தொழிலாளர்கள் எனவும் ஏனைய 22 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6028  ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 561 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 454 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments