Advertisement

Responsive Advertisement

நேற்று மாத்திரம் 541பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 8413ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் நேற்றைய தினம் 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களில் 499 பேர் மினுவாங்கொடை - பேலியகொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 42 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி மினுவங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 4,939 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 32 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 4,464 கொரோனா நோயாளர்கள் சிகிச்ச‍ை பெற்று வருகின்றனர்.

இதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக உள்ளதுடன், மேலும் 527 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments