Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் 11பேருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

 


பேலியகொடை மீன்சந்தைக்கு வியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று இன்று சனிக்கிழமை (24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எ.லதாகரன் தெரிவித்தார் .


கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தையுக்கு சென்றவர்கள் மூலம் திருகோணமலை, பொத்துவில், கல்முனை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் தற்போது 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் செல்வதை தவிர்ப்பதுடன் இவர்களுடன் சம்மந்தப்பட்டவாகள் இருப்பின் பொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Post a Comment

0 Comments