Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலை- முனைக்காட்டில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்திற்கு நண்பர்கள் நற்பணி மன்றத்தினால் தையல் இயந்திரம் வழங்கி வைப்பு!!

 


வாழ்வாதாரத்தை இழந்து வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கும் நண்பர்கள் நற்பணி மன்றமானது பல உதவிகளை வழங்கி வருகிறது.


அந்த வகையில் மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை, முனைக்காடு மேற்கு 08 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் தியாகராஜா ஜீவிதா என்பவருக்கு நண்பர்கள் நற்பணி மன்றத்தால் தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த குடும்பமானது 10 வயதிற்கு உட்பட்ட இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பமாகும். தாய் கூழித்தொழில் புரிந்தே இரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றார். சிறு பிள்ளைகள் என்பதால் அவர்களைத் தனியாக விட்டு வேலைக்குச் செல்லமுடியாத சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்.

இதனை அறிந்து பிள்ளைகளின் கல்வி மேன்பாட்டிற்காகவும் குடும்பப்பொருளாதாரம் வளம்பெறும் பொருட்டும் ஒரு தையல் இயந்திரத்தினை நண்பர்கள் நற்பணி மன்றமானது அவர்களுக்கு  2020.09.14 அன்று பெற்றுக் கொடுத்துள்ளது.

நண்பர்கள் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த உதவியானது மன்றத்தின் உறுப்பினர்களின் எதிர்பாராத உதவிகளால் கிடைத்த பணத்தின் மூலமே வழங்கப்பட்டத்தை எண்ணி நண்பர்கள் நற்பணி மன்றமானது மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது.

Post a Comment

0 Comments