சித்தா)
திறந்த பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கல்வி மான் க.ஞானரெத்தினம் அவர்களின் சேவையினைப் பாராட்டி தனது மாணவர்களால் "ஆசானுக்கு மகுடம்" எனும் விழாவினை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
வாழும் போதே வாழ்த்துவோம் என்பதற்கு இணங்க சிரேஸ்ட விரிவுரையாளர் கல்வி மான் க.ஞானரெத்தினம் அவர்களுக்கான மகுடம் சூட்டும் விழாவானது விழாக்குழுத் தலைவர் திரு.M.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு அஞ்ஞனா வைபவ மாளிகை அருட்சகோதரர். கலாநிதி.S.A.I.மத்தியூ அரங்கில் 19.09.2020 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் S.A அரியதுரை அவர்கள் உபவேந்தர், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை. கௌரவ விருந்தினர்களாக திரு.M.K.M.மன்சூர், சிரேஸ்ட உதவிச் செயலாளர், மாகாணக் கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம். Dr.C.அருள்மொழி,தலைவர், கல்வி, பிள்ளை நலத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக் கழகம். திரு.M.I.M நவாஸ், பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு. திரு.மு.புண்ணியமூர்த்தி, பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை. Dr.S.M. ஜுனைதீன், பீடாதிபதி, பொறியியல் பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.S. பிரதீபன், பீடாதிபதி, விஞ்ஞான பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.S.திருக்கணேஸ், கணிதப் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம். ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் விசேடமாக பேராசிரியர்.S.A.அரியதுரை, பேராசிரியர். S.சந்திரசேகரம், பேராசிரியர்.M.கருணாநிதி, பேராசிரியர் .P. C. பக்கீர் ஜபார், பேராசிரியர். K. சின்னத்தம்பி, பேராசிரியர். T.தனராஜ், பேராசிரியர். M.செல்வராசா, திரு.T.ராஜேந்திரன், கலாநிதி.T.கலாமணி ஆகியோருக்கு மகுடம் சூட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
0 Comments