இலங்கையை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்க்படப்டுள்ளது.
மேலும், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேலைகளில் மழை பெய்யுமென அறிவிக்க்படப்டுள்ளது.
அத்துடன் சில இடங்களில் 50 மில்லிமிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இதனால் இடியுடன் மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்க்படப்டுள்ளது.
0 Comments