கிழக்கு கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான MT New Diamond கப்பல் 40 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படை உறுப்பினர்கள் மற்றும் பொறியியலாளர்கள் 22 பேர் இந்திய விமாபடைக்கு சொந்தமான விசேட விமானமூடாக நேற்று இரவு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும் குறித்த நடவடிக்கைகளுக்காக சுமார் 11 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடற்கடை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை கப்பல் ஆழமற்ற கடற்பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தீப்பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் கப்பலின் உரிமையாளர், காப்புறுதி நிறுவனம் உட்பட மீட்பு குழுவினருடன் நேற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாக வர்த்தக கப்பல் செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நால்வர் அடங்கிய குழுவினர் இன்று நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் வர்த்தக கப்பல் செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
0 Comments