Advertisement

Responsive Advertisement

இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் காதர் மஸ்தான் எம்.பி

 


இறைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வது தொடர்பில் ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.

20 ஆவது திருத்தம்,13 ஆவது திருத்தம் மற்றும் இறைச்சிக்காக மாடறுப்பதை தடைசெய்தல் என்பன குறித்து பேசப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த காதர் மஸ்தான் எம்.பி,

இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. யாரும் யோசனை முன்வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமக, கூறுகையில்,

இறைச்சிக்காக மாடறுக்கும் யோசனை பிரதமர் முன்வைத்தார். இதற்கு வரவேற்புள்ளது. உள்நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தி தன்னிறைவு காண திட்டமிடப்பட்டுள்ளது. இறைச்சிக்காக காளை மாடுகள் அறுக்கப்படுவதால் அவற்றின் தட்டுப்பாடுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments