Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள 2 வருடங்களுக்கு தடை!!

 


இலங்கையில் அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அனைத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள கட்டடங்கள் தொடர்பில் திறைசேரிக்கு அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments