Advertisement

Responsive Advertisement

மாணவர் சமூகத்தை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்பூட்டும் சுவரொட்டிகள்!


 (எச்.எம்.எம். பர்ஸான் )

பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர் சமூகம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுவரொட்டிகள் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வி அமைச்சு, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுக்கள் வெளியிட்டுள்ள குறித்த சுவரொட்டியில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றி அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் (31) திங்கட்கிழமை அதன் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments