Advertisement

Responsive Advertisement

பொலன்னறுவையில் மாணவனுக்கு கொரோனா - இழுத்து மூடப்பட்டது பாடசாலை

 

பொலன்னறுவை - ராஜாங்கன பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் வீட்டெதிரே வசித்தவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 102 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே குறித்த மாணவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது சிறிசெவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மாணவன் கல்வி பயிலும் ராஜாங்கன நவோத்தியா பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments