மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு, வலயக்கல்விப் பணிப்பாளராக அகிலா கனகசூரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கல்வி வலயத்திற்கு கல்வி நிர்வாகசேவை வகுப்பு 1ஐ சேர்ந்தவரை நியமிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டது. இந்நேர்முகத்தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்ற அகிலா கனகசூரியம் வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை(17) முதல் செயற்படும் வண்ணம் இந்நியமனக்கடிதம் கல்வி அமைச்சின் செயலாளரினால் இன்று(12) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும், மூதூர் வலயக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றியதுடன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments