புதிய பாராளுமன்றின் அமைச்சு நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஏற்கனவே அமைச்சுக்களின் கட்டமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 40 ராஜாங்க அமைச்சுக்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.
கல்வி அமைச்சின் கீழ் நான்கு ராஜாங்க அமைச்சுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன.
ராஜாங்க அமைச்சுக்களில் 39 அமைச்சுக்கள் இன்று வழங்கப்பட்டன. கல்வித் துறை சார்ந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சு யாருக்கும் வழங்கப்படவில்லை.
ஏற்கனவே விஜேதாச ராஜபக்ச விற்கு இவ்வமைச்சு வழங்குவதற்கான உடன்பாடுகள் காணப்பட்டாலும் விஜேதாச ராஜபக்ச குறித்த அமைச்சைப் பொறுப்பேற்க மறுப்புத் தெரிவித்துள்ளதோடு, இன்றைய வைபவத்தில் கலந்து கொள்ளாது நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் அறிய முடிகிறது.
0 Comments