Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பில் வாக்களிப்புக்கள் முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் 6.00 மணியளவில் பிரதான கணக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வந்துசேர்ந்துள்ளன.


அதற்கான உத்தியோகத்தர்கள் 4.00மணி முதல் தயார்நிலையில் உள்ளதாகவும் அதற்கான பாதுகாப்பு பிரிவினர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான கணக்கெடுப்பு நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் வாக்குப்பெட்டிகள் கட்சிகளின் முகவர்கள் முன்நிலையில் மேலும் ஒரு விசேட அட்டைப்பெட்டியில் இட்டு விசேட பொதியிடல் செய்யப்பட்டு சீல் செய்து பாதுகாப்பாக கட்சிகளின் முகவர்கள் முன்நிலையில் பிரதமக ணக்கெடுப்பு அதிகாரியினால் களஞ்சிப்படுத்தப்படும்.

மறு நாள் காலை பிரதம கணக்கெடுப்பு அதிகாரியின் தலைமையில் கட்சிகள், சுயேச்சை  குழுக்களின் முகவர்கள் முன்நிலையில் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டு 8.00 மணிக்கு கணக்கெடுக்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக மட்டக்களப்பு தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமிதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76.15 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் 67.26 வீதமாகும். 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐனாதிபதித்தேர்தலில் அளிக்கப்பட்ட 75 வீதத்திலும் பார்க்க கொரோனா அச்சத்திலும் மக்கள் ஆர்வத்துடன் அச்சம் இன்றி வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை மக்கள் கொரோனா அச்சத்திலும் ஒருமுறையும் இல்லாத வகையில் வாக்களித்திருக்கின்றது என்பது மக்கள் தங்களின் சனநாயக உரிமையினை மதித்திருக்கின்றனர் என்பது இந்த தேர்தலில் புலனாகின்றது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |