Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்

(வி.சுகிர்தகுமார்)
கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் அடியார்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் இன்று (21) நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் எழுந்தருளிய முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார். அங்கு இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற கிரியைகளை ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம்குருக்கள் நடாத்தி வைத்தார்.

இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments