இலங்கையில் பல்வேறு கட்டங்களின் கீழ் அரச சேவையாளர்கள் அஞ்சல்மூல வாக்கினை செலுத்துவதற்
கு கடந்த 13 ஆம் திகதி முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை ராஜாங்கனை பகுதியில் கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிற்போடப்பட்ட ராஜாங்கனை பிரதேச செயலாளர் பிரிவிற்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தலை இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 224 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 3 வேட்பாளர்கள் உள்ளிட்ட 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 64 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 Comments