Advertisement

Responsive Advertisement

ஆசிரியருக்கு கொரோனா தொற்று; 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

கம்பஹா மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.
கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க இதை தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் கம்பஹாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ளார்.
இதனால் அந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு கம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய பாடசாலை ஆலோசகரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளார்.

Post a Comment

0 Comments