சுவீடன் நாட்டின் Dream Space Academy நிறுவனத்தினால் நடத்தப்பட்ட WATER RESEARCH என்ற ஆராய்ச்சியில் பல உலகளாவிய நாடுகள் கலந்து கொண்டன. அவற்றில் 24நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. ஆசியாவில் இலங்கை மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் மட்டக்களப்பு மண்ணின் மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கல்வி கற்கும் தம்பிப்பிள்ளை தினோஜன், கணேசமூர்த்தி அவிநயா ஆகிய மாணவர்கள் இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் இவ் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்க்க காரணமாக இருந்த பொறுப்பாசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டும்
முகமாக ஆசிரியரான தேவகுமார் அவர்களும் அதிபராகிய நா.நாகேந்திரன் அவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டிய போது..
0 Comments