Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அதன் பிறகு அமிதாபின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவரும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பிறகு அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகர்களோ கொரோனா வைரஸை சபித்துக் கொண்டிருக்கிறார்கள். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா என்று 4 பச்சன்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்த்து பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சாவுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments