Advertisement

Responsive Advertisement

மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து

இன்று மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 நால்வர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிப்பிங் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேர் எதிர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் சென்ற இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண்(சாரதி) ஆகியோரே இவ் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அம்பியூலன்ஸ் வண்டியில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு ஊரணி பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

சாரதிக்கு கால் உடைந்துள்ளதுடன், யுவதி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது  


விபத்து குறித்த மேலதிக விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments