Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அன்ரன் பாலசிங்கம் உலக ராஜதந்திரி! கருணா புகழாரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் உலக ராஜதந்திரி என கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றிய போதே கருணா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இத்தேர்தல் கூட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், தன்னை நம்பி ஒன்று கூடிய மக்கள் கூட்டத்தை பார்த்து ஆனந்த கண்ணீருடன் கருணா உரையாற்றியுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
அன்ரன் பாலசிங்கம் என்பவர் உலக ராஜதந்திரியாவார். அவரை இழந்தது தான் தமிழ் இனம் தற்போது வரை மீள எழும்பாமல் இருப்பதற்கு காரணமாகும்.
இந்நிலையில் இனிவரும் காலங்களில் கூட்டமைப்பு போன்றவர்களை நிராகரித்து வடகிழக்கில் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.


Post a Comment

0 Comments