Advertisement

Responsive Advertisement

திடீரென புகுந்த பயங்கரவாதிகள்: ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட பொதுமக்கள்!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்தும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மாலியின் தெற்கு பகுதியில் புர்கினா பாசோ நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மோப்தி பிராந்தியத்தில் டோகன் எனப்படும் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களுக்குள் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சற்றும் ஈவிரக்கமின்றி வீடுகளுக்குள் இருந்த பெண்கள், குழந்தைகளை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments