பிரான்ஸில் நன்ற் நகரில், கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பரிஸில் கடந்த வருடம் நோட்ரே-டாம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் ஒரு வருடத்திற்குப் பின்னர் நேற்றைய தினம் மற்றுமொரு தேவாலயத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது இந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து, திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
பரவிய தீயை கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயணப்புத்துறை வீரர்கள் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த தீயினால் பாரிய சேதம் ஏற்படும் என ஆரம்பத்தில் அஞ்சப்பட்டது. எனினும் ஏற்படவிருந்த மோசமான சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments