Advertisement

Responsive Advertisement

வாகன சாரதிகளுக்கு சற்றுமுன் வெளியான அறிவிப்பு! புள்ளி வழங்கும் திட்டம்; அவதானம் !

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில், சாரதிகளால் வீதி விதிமுறைகள் மீறப்படுகின்ற போதிலும் விபத்துக்களை ஏற்படுத்துகின்ற போதிலும் புள்ளிகள் குறைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

வாகன மற்றும் வீதி விபத்துக்களின்போது சாரதிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்குவது தற்போது நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments