அமரர் பா.துஷ்காந்தன் அவர்கள் மட்/அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்ப, இடைநிலைக் கல்விகளை மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கற்றவர். இளமையில் துடிப்பும் நகைச்சுவைத் தன்மையும் கொண்ட இவர் கட்டார் வைத்தியசாலையில் நெஞ்சுவலி தொடர்பான நோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட வேளையில் 23.07.2020 அன்று மாரடைப்புக் காரணமாக சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இறைபதமடைந்த அன்னாருக்கு மட்/குருக்கள்மடம் நண்பர் குழாம், www.kurunews.com குழுமத்தினரும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் வேண்டிநிற்கின்றார்கள்.
0 Comments