Home » » நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம் - தமிழில் பேசிய மஹிந்த

நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம் - தமிழில் பேசிய மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெருமளவு நிதியை செலவிட்டது. ஆனால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் முதல் அம்பாந்தோட்டை அம்பாறை- கல்முனை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாறை நகரம் நிர்வாகக் கேந்திர மையமாக அபிவிருத்தி செய்யப்படும்.
நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம் இது உங்களுக்கு நன்றாக தெரியும். எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேகர் என்ற பேதமில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சு இருந்தது. ஆனால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் காணப்படவில்லை. கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களின் பெருமளவில் நிதியை செலவிட்டு நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையில் விரிசல் நிலையை ஏற்படுத்தினார்கள்.
30 வருடகால சிவில் யுத்தம் கிழக்கு மாகாணத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கல்வி,மற்றும் தொழில்வாய்ப்புக்கள் ஆகியவை பல இளைஞர், யுவதிகளுக்கு கேள்விக் குறியாக்கப்பட்டது.
குறுகிய காலத்தில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து அனைத்து இன மக்களின் சுதந்திரம்,பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம்.
போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப கடந்த அரசாங்கத்தில் நல்லிணக்க அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஆனால் நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.
முஸ்லிம் சமூகத்தினரது வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்று அமைதியற்ற நிலை ஏற்பட்டது. நாங்கள் பிரச்சினைகளை சுமுகமாக வெற்றி கொண்டோம்.
அம்பாறை மாவட்டத்தில் வாழும் மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளை எதிர்க் கொள்கிறார்கள். 07 கிராமங்களில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்க் கொள்கிறார்கள்.
அம்பாறை மாவட்டம் சுற்றுலாத்துறையின் பிரதான மையமாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவையினை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.அத்துடன் இம்மாவட்டம் நிர்வாக கேந்திரமையமாக மாற்றியமைக்கப்படும் கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றார்.
குறித்த கூட்டத்தில் பிரதமர் மஹிந் தமிழிலும் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |