பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையில் செயற்படும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முகக்கவசம் அணிந்து வருவோரை மாத்திரம் பேருந்துக்குள் அனுமதிக்குமாறும் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகள் தொடர்பாக முறைப்பாடு செய்ய முடியும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments: