மட்டக்களப்பு -கல்லடி பிரதான வீதியில் இன்று(6) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாடு ஒன்று வீதியினை எதிர்பாராத விதமாக குறுக்கறுத்ததனால் நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்யும் நபர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மாடு ஒன்று திடீர் என்று வீதியினை கடந்தமையினால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மோதி வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதியதில்..ஒரு மோட்டார் சைக்கிள் வடிகானினுள் விழுந்துள்ளது. தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் அவர் நோய் காவும் வண்டியில் பொதுமக்களால் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதே சமயம் மாடு குறுக்ககறுக்க வீதியால் பயணித்த பிக்கப் ரக வாகனம் உடனே நிறுத்தப்பட்டுள்ளது, இதனை எதிர்பாராது பின்னால் வந்த வேன் நிறுத்தப்பட்ட பிக்கப்பின் மீது மோதி நின்றுள்ளதாக விபத்தினை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விபத்தினால் இரு மோட்டார் சைக்கிள், பிக்கப் மற்றும் வேன் ஆகிய நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இவ் விபத்து தொடர்பான விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments: