Home » » இரண்டாம் கட்டத்தின் கீழ் ஜூலை 06இல் பாடசாலைகள் ஆரம்பம்

இரண்டாம் கட்டத்தின் கீழ் ஜூலை 06இல் பாடசாலைகள் ஆரம்பம்

நான்கு கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், (06) மீண்டும் திறக்கப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 02ஆம் கட்டத்தின் கீழ் தரம் 05, 11, 13 மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும்.

02ஆம் கட்டத்தின் கீழ் மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள், எதிர்வரும் 17ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

01ஆம் கட்டத்தின் கீழ், அனைத்து அரசாங்க பாடசாலைகளும் கடந்த 29ஆம் திகதி திறக்கப்பட்டன.

சாலைகளுக்கான நீண்ட விடுமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி செயலணிக் குழு அதிகாரிகள், அமைச்சரவை அமைச்சர்கள், உயர் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு அதிகாரிகள், ஜனாதிபதி, கல்வி அமைச்சு ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடாலை தொடர்ந்து, பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை தரம் 5, 11, 13 மாணவர்களைக் கோரும் வகையில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

03ஆம் கட்டத்தின் கீழ் தரம் 10, 12 மாணவர்களுக்கு ஜூலை 20ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, குறித்த வகுப்பு மாணவர்களை சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, இது ஜூலை 24ஆம் திகதி வரை பாடசாலை இடம்பெறும்.

04ஆம் கட்டத்தின் கீழ் தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களுக்கு ஜூலை 27ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாட்டிலுள்ளஅனைத்துபாடசாலைகளினதும்தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள திறப்பதற்கு, கல்விஅமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச்16 முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை 07ஆம் திகதி ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |