Home » » எல்லா மதத்தவரும் நிம்மதியாக வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதே எமது இலக்கு : தே.கா கொள்கை அமுலாக்கள் செயலாளர் ஏ.எல்.எம்.றிபாஸ்.

எல்லா மதத்தவரும் நிம்மதியாக வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதே எமது இலக்கு : தே.கா கொள்கை அமுலாக்கள் செயலாளர் ஏ.எல்.எம்.றிபாஸ்.



நூருல் ஹுதா உமர்

இன்றைய காலகட்டங்களில் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் எதிர்காலத்தில் தீர்கப்பட வேண்டுமானால் எமது நாட்டில் நிரந்தரமாக அரசாங்கம் அமைக்க உள்ள மொட்டு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலமே சாத்தியமாக்க முடியும் என்பதுடன் நிரந்தரமான தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் அக்கட்சியின் சட்டமொழுங்கு கொள்கை அமுலாக்கள் செயலாளருமான ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு இளைஞர் அணியினரை மாளிகைக்காடு அமைப்பாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,எமது இலக்கு அமையப்போகின்ற அரசாங்கத்தில் சிறந்த தீர்வுத்திட்டங்களினை முன்வைக்கின்ற கட்சியாக இருப்பதுடன் நாட்டில் வாழும் நான்கு சமயங்களும் சரிநிகராக நிம்மதியாக வாழும் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இன்று எங்களின் அரசியல் தலைமைகளான ஹக்கீமும் றிசாத்தும் எமது சமூகத்தை பெரும்பான்மை சமூகத்துக்கு எதிரானவர்களாக காட்டும் உணர்ச்சி பொங்கும் அரசியலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறான அரசியலை எங்களுக்கு செய்யவேண்டிய தேவை இல்லை. முஸ்லிங்களாகிய எமக்கு இஸ்லாம் இவ்வாறான பிரித்தாளும் பண்புகளை காட்டித்தரவில்லை. பெரும்பான்மை இன மக்களோடும் பெரும்பான்மை சமூகத்தவர்கள் ஆதரிக்கின்ற ஆட்சியோடும் ஒன்றித்த அரசியலைத்தான் நாங்கள் இந்த காலத்தில் செய்ய வேண்டும். அதுதான் எமது நாட்டுக்கு சிறந்த செயலாக அமையும். எமது மக்கள் இயக்கமான தேசிய காங்கிரஸ் ஆரம்பித்த நாள்முதல் இன்றுவரை அதே அரசியல் பாதையில் அதே அரசியல் பயணத்தில் தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி பயணித்துக் கொண்டிருக்கின்றது.நாட்டை பற்றியும் எமது முஸ்லிம் சமூகத்தை பற்றியும் சிறிதளவேனும் சிந்திக்காமல் எங்களை ஏமாற்றி பிழைக்கின்ற சீசனுக்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு இனி வரும் காலங்களில் அளிக்கப்படுகின்ற வாக்குகளினால் எந்த பிரயோசனமும் இல்லை.

நாட்டில் குழப்பத்தையும் நிம்மதியின்மையையும் உருவாக்க முடியுமே தவிர எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. கடந்த நல்லாட்சியில் எமது 21பிரதிநிதிகள் அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கத்தக்க நிலையில்தான் முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியது. இவ்வாறானவர்களை நம்பி எமது சமூகம் ஏமாந்ததும் ஏமாற்றப்பட்டதும் போதும்.

இனியும் நாம் ஏமாறத்தயாறில்லை. என்பதை இவர்களுக்கு ஆகஸ்ட் 05ஆம் திகதி உணர்த்த வேண்டும். அதனாலயே தான் நாங்கள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவோடு தூய அரசியல் பயணத்தில் இணைய உங்களை அழைக்கிறோம். தற்போதுள்ள அரசாங்கம் எதிர்வருகின்ற பல வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகின்றது என்பதே எதார்த்தமான உண்மை என்றார்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |