Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழிப்பாதையாக மாற்றம்

(லியோன்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி நேற்று (25) முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுத்தித்திருந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன .

இந்நிலையில் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி உத்தியோகபூர்வமாக நேற்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியில் சோதனை நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments