Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு

இவ்வருடம் இடம்பெறும் உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
நேற்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நூற்றுக்கு 30% ஆனவர்கள் இந்த பணிக்கு வருவதில்லை. இது மாத்திரமன்றி

இன்னும் சில காரணங்களினால் இம்முறை இந்த மேலதிக கொடுப்பனவு ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலமான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments