நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் தற்போது முழ்கிப் போகும் அபாயத்தில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அநுராதபுரத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் 2005 ஆம் ஆண்டு நான் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவன். அது குறித்து அவர் நன்கறிவார். அத்துடன் அவர் வழங்கிய பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றினேன். இப்போது ஒரு இரகசியத்தை வெளியிட எதிர்பார்க்கின்றேன் இது வெறும் இரகசியம் மாத்திரமே புறங்கூறுதல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இலஞ்சம் வழங்கி தேர்தலை புறக்கணிக்க கோரிய தரப்பினர் இன்று ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்த கருத்தை பிடித்துக்கொண்டு தடுமாறுவதாக முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
அன்றைய நிலையில் வடக்கில் மக்கள் வாக்களிக்கவில்லை. வடக்கில் இருந்த சட்டத்தரணி ஒருவருக்கும், ஊடகவியலாளர் ஒருவருக்கும் இலஞ்சம் வழங்கி அதாவது தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு பணம் கொடுத்து தேர்தலை புறக்கணிக்க கோரப்பட்டது. வெற்றி தேவையாக இருந்ததால் நாமும் ஒத்துழைத்தோம்.
அன்று அவ்வாறு பிரபாகரனுக்கு இலஞ்சம் வழக்கி தேர்தலை புறக்கணிக்க கோரிய தரப்பினர் இன்று பேராசிரியர் ஒருவரின் கருத்தை வைத்துக்கொண்டு தடுமாறுகின்றனர்.
மோசடிக்காரர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே அவர் கூறியிருந்தார் ‘தொப்பி அளவென்றால் போட்டுக் கொள்ளுங்கள்” எனவும் மேவின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments