வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்ணில் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு பொலிஸாருக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் இன்று கட்டளை பிரப்பித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா வயது 60 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் இடத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு பொலிஸாருக்கு கட்டளை பிரப்பித்தார்.
அத்தோடு சடலத்தினை டீ.என்.ஏ. பரிசோதனை, மரபனு பரிசோதனை என்பவற்றை மேற்கொள்வதற்கு அரசாங்க இரசாயண திணைக்களத்திற்கு அனுப்பவதற்கு பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளை பிரப்பிக்கப்பட்டது.
மேலும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் குறித்த பெண்ணின் சடலத்தை ஒப்படைக்குமாறும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீலினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிறைந்துறைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண் இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்த பொது கதவு திறந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்ததுடன், அந்த அறையில் இருந்த அலுமாரியும் உடைத்து காணப்பட்ட நிலையில் அதனை கண்ட உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: