Advertisement

Responsive Advertisement

பிரச்சார நடவடிக்கைகளுக்கென விசேட சுகாதார ஆலோசனைகள்

பொது தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு செல்லும் போது சுகாதார பரிந்துரைகள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று ஒழுங்குசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். கட்சி என்ற அடிப்படையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற தயாராகவுள்ளதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைகளுக்கமைய மூவர் மாத்திரமே ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கென வீட்டுக்கு வீடு செல்லமுடியும். குறித்த ஆலோசனையை தாம் கட்டாயம் பின்பற்றவுள்ளதாக ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் 225 பேரில், மூன்றில் இரண்டு அதிகாரத்தை பெற்று பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி, மொட்டு சின்னத்தில் வெற்றிபெறுவது உறுதியெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments