Advertisement

Responsive Advertisement

மீண்டுமொரு புதிய அறிவிப்பை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

அரசியல் கூட்டங்கள் தொடர்பாக தீர்மானிப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு வரம்புகளை நிர்ணயிக்கும்போது, அரசியல் கட்சிகள் அந்த வரம்பில் கலந்தாலோசிக்கவில்லை என்ற, சில அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அண்மையில் முன்வைத்திருந்தனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் காரணமாகவே, மஹிந்த தேசபிரிய மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய, தேர்தல் கூட்டங்களை நடத்த வரம்புகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments