Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருதில் அதிகரிக்கும் தே.கா ஆதரவு : வேட்பாளர் சலீமை நோக்கி படையெடுக்கும் மக்கள் !


நூருல் ஹுதா உமர், கபூர் அன்வர்

நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களை ஆதரித்து சாய்ந்தமருது SYF அமைப்பு ஏற்பாடு செய்த மக்கள்  சந்திப்பும் கருத்தரங்கும் இன்று (07)மாலை சாய்ந்தமருதில் அவ்வமைப்பின் பிரதானிகளின் தலைமையில் நடைபெற்றது.

மற்றும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர்கள் மற்றும் மகளிர் சங்க தலைவர், செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பும் இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர். அஸீம், ஏ.ஆர்.எம். அஸீஸ் , சப்ராஸ் மன்சூர், முகர்ரம் பஸ்மிர், ஏ.எம்.ஜௌபர், திருமதி நளீம் ஆகியோருடன் தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ. எல்.என். ஹுதா, தேசிய காங்கிரஸின் தொழில்துறை செயலாளர் ஏ.சி.எம். நிஸார் மற்றும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை தலைவர் உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் நதீர் ஆசிரியர் உட்பட பல  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 இன்று நடைபெற்ற கருத்தரங்கில்  கலந்துகொண்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களுடன் இணைந்து தேர்தல் வெற்றிக்காக செயற்படவுள்ளதாக  தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments