Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றப்படவுள்ள ஆயுள் தண்டனை கைதிகள்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


கடுமையான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பின் இந்த தீவில் தற்போது தொழுநோயாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இரண்டு பேர் மாத்திரமே உள்ள நிலையில் அவர்களும் குணமாகி வருகின்றனர்.
இதனையடுத்தே அந்த தீவை சிறைச்சாலைகள் திணைக்களம் பொறுப்பேற்று கடும் குற்றம் காரணமாக ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்களை அங்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைக்கு சில காலம் தேவைப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments