கொரோனா கோவிட் – 19 நிதிக்காக அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் பலவந்தமாக வெட்டிக்கொள்வது அங்கீகரிக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாண செயலாளர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் எழுத்துமூலமாக வழங்கியுள்ள கடிதத்தில், தானாக முன்வந்து வழங்கினால் மாத்திரம் கொரோனா நிதிக்காக சம்பளத்தில் ஒரு தொகையைப் பெற்றுக்கொள்ள முடிமுடியும் என்றும், வலுக்கட்டாயமாக சம்பளத்தைக் குறைக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் டி.டி.விமலசூரியவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சில அரசு நிறுவனங்கள் அதன் ஊழியர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வலுக்கட்டாயப்படுத்துகிறது என்றும், பல்வேறு வழிகளில் சம்பளத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஊழியர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவ்வாறு அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஒருதொகையைத் துண்டிப்பது தவறு என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments