கருணா அம்மானின் சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கருணா அம்மானின் கீழ் இயங்கிய விடுதலைப் புலிகளின் பிரிவு, 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நூற்றுக்கணக்கான காவல்துறை அலுவலர்களை கொலை செய்ததாகவும், அந்த ஆண்டின் அடுத்த மாதம் 75 முஸ்லிம் பயணிகளை கொலை செய்ததுடன், அதே ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் மட்டக்களப்பில் 200 பொதுமக்களை கொலை செய்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர், 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர்கூட விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஏனைய அமைப்புகள், கருணா குழு என அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாகவும். அது சம்பந்தமதாக விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்.
மாறாக அவருக்கு 2009 ஆம் ஆண்டு, அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.
தற்போது, அவர் முன்வைத்துள்ள கருத்தின் அடிப்படையில், இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆயினும், அவருக்கு உள்ள செல்வாக்கின் அடிப்படையில், அவர் இந்த விசாரணையில் இருந்து தப்பிச் செல்வார் என்ற ஐயத்தையும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளிப்படுத்தியுள்ளார்.

0 Comments